உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நெற்பயிருக்கு காப்பீட்டு திட்டம் நீட்டிப்பு

நெற்பயிருக்கு காப்பீட்டு திட்டம் நீட்டிப்பு

மதுரை; மதுரை மாவட்டத்தில் குறுவை பருவ நெற்பயிருக்கான பயிர் காப்பீட்டு திட்டம் ஆக. 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இயற்கை இடர்பாடுகளினால் விவசாயிகளுக்கு ஏற்படும் மகசூல் இழப்பிற்கு பயிர் காப்பீட்டு திட்டம் ஈடு செய்யும். அறிவிக்கப்பட்டுள்ள கிராமங்களில் உள்ள அனைத்து விவசாயிகளும் பொது சேவை மையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தேசிய வங்கிகளில் நடப்பு பருவ அடங்கல், சிட்டா, வங்கிக்கணக்கு நகல், ஆதார் அட்டையுடன் பதிவு செய்யலாம். நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.720 பிரீமியம் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இழப்பு ஏற்பட்டால் இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.36 ஆயிரம் விவசாயிகளுக்கு கிடைக்கும் என வேளாண் துறை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை