உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நீர்வளத்துறை ஏமாற்றுகிறது: விவசாயிகள் குற்றச்சாட்டு

நீர்வளத்துறை ஏமாற்றுகிறது: விவசாயிகள் குற்றச்சாட்டு

மேலுார் : மேலுார் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செந்தாமரை தலைமையில் விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடந்தது. விவசாயிகள் ரவி, கிருஷ்ணன், மணி, கதிரேசன், அருண், சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் பேசியதாவது: கோட்டநத்தாம்பட்டியில் மாயாண்டி கண்மாய், இலுப்பக்குடி கால்வாயில் தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். திருவாதவூர் புதுக்குளம் கண்மாயை துார்வார வில்லை. தண்ணீர் திறக்க 9 நாட்களே உள்ள நிலையில் டெண்டர் விடாமல் கால்வாய்களை மராமத்து மற்றும் சுத்தப்படுத்துவது போல் நீர்வளத் துறையினர் ஏமாற்றுகின்றனர். பராமரிப்பு நிதியில் முறைகேடு செய்கின்றனர். விதை இருப்பு விவரங்களை விவசாயிகளுக்கு வேளாண் துறையினர் தெரிவிக்கவில்லை. மேலவளவு வேப்பனேரி கண்மாய் மடையில் உடைப்பு குறித்து மனு கொடுத்தும் சரிசெய்யவில்லை என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை