உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வணிகத்துாதர்களாக விவசாயிகள்

வணிகத்துாதர்களாக விவசாயிகள்

மதுரை : மதுரை வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம் சார்பில் விவசாயிகளை வணிகத் துாதர்களாக மாற்றுவதற்கான விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்படுவதாக துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி தெரிவித்தார்.அவர் கூறியதாவது: வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை கமிஷனர் பிரகாஷ் உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதிலும் கிராமத்திற்கு இரண்டு விவசாயிகள் வணிகத்துாதர்களாக தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்கள் விவசாயிகளுக்கும் வேளாண் வணிகத்துறைக்கும் பாலமாக செயல்படுவர். ஏற்கனவே அனைத்து கிராம வேளாண் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் மதுரையில் 20 இடங்களில் உலர் களத்துடன், விளைபொருட்களை தரம்பிரித்து சுத்தப்படுத்துவதற்கான ஹால் அமைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதி விவசாயிகள் அறுவடை செய்த பின் தங்களது பொருட்களை இந்த ஹாலில் மொத்தமாக வைக்கும் போது வியாபாரிகளுடன் தொடர்பு ஏற்படுத்த எளிதாக இருக்கும். இதன் மூலம் விளைபொருட்களை நிரப்புவதற்கான சாக்கு, போக்குவரத்து வாடகை, ஏற்று கூலி, இறக்கு கூலி அனைத்தும் விவசாயிகளுக்கு மிச்சமாகும். இந்த விவசாயிகளை அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பதே வணிகத் துாதராக செயல்படும் விவசாயிகளின் வேலை. இவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. தற்போது வாடிப்பட்டி, உசிலம்பட்டியில் 64 விவசாயிகளுக்கு ஒருநாள் பயிற்சி அளித்து வணிகத் துாதர்களாக்கியுள்ளோம். டிச. 2ல் மதுரை கிழக்கு, மேற்கு, திருப்பரங்குன்றத்திற்கும் டிச. 3 ல் கள்ளிக்குடி, திருமங்கலம், 4ல் மேலுார், கொட்டாம்பட்டி, 5 ல் டி.கல்லுப்பட்டி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார்.உசிலம்பட்டி, வாடிப்பட்டியில் நடந்த பயிற்சி முகாமில் வேளாண் விற்பனைக்குழு செயலாளர் அம்சவேணி, வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் சரவணப்பெருமாள் தலைமை வகித்தனர். உதவி வேளாண் அலுவலர்கள் ஆனந்தன், கந்தசாமி, ராஜ்குமார், சர்மிளா, காயத்ரி கலந்து கொண்டனர். வேளாண்மை அலுவலர்கள் மீனா, சித்தார்த், மேற்பார்வையாளர்கள் சுந்தரி, அபிநயா திட்டங்கள் குறித்து விளக்கினர்.விவசாயிகளை அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பதே வணிகத் துாதராக செயல்படும் விவசாயிகளின் வேலை. இவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை