ஆர்ப்பாட்டம் நடத்த விவசாயிகள் முடிவு
மேலுார் : மேலுாரில் முல்லைப் பெரியாறு விவசாய சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் செயலாளர் ரவி தலைமையில் நடந்தது.நிர்வாகிகள் ஜெயபால், குறிஞ்சிகுமரன், வழக்கறிஞர் ஸ்டாலின் முன்னிலை வகித்தனர். டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு கொடுத்த உரிமையை ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசு சுற்றுச் சூழல் அனுமதி உள்ளிட்ட எவ்வித அனுமதியும் வழங்க கூடாது. முல்லை பெரியாறு பாசன பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக முடிவெடுத்து சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இவற்றை நிறைவேற்ற வலியுறுத்தி நவ. 29 மேலுார் பென்னிகுயிக் பஸ் ஸ்டாண்ட் முன்பு ஆர்பாட்டம் நடத்துவது என முடிவு செய்தனர்.