உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பகுதிகளில் நேற்று முன்தினம் விடிய விடிய மழை கொட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மானாவாரி பகுதிகளில் விவசாயிகள் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். கிணறு, ஆழ்குழாய்களில் தண்ணீர் உள்ள விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். பலர் நாற்றுப் பாவியும், பலர் நாற்றங்கால் அமைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். சில நாட்களாக மழை பெய்துவரும் நிலையில் நேற்று முன்தினம் விடிய விடிய நல்ல மழை பெய்தது. இதனால் பெரும்பாலான வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது. நெல் நடவு பணிகளை துவங்காத விவசாயிகள் நேற்று முதற்கட்டப் பணிகளை துவக்கினர். விவசாயிகள் கூறுகையில், ''நல்ல மழை பெய்தால் விவசாய பணிகளை துவக்கலாம் என்று இருந்தவர்களுக்கு இந்த மழை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. சரியான நேரத்தில் நல்ல மழை பெய்துள்ளது. இந்த மழையால் நெல் நாற்றுகளில் நோய் தாக்கம் இருக்காது. நாற்றாங்கால் அமைப்பதற்கும், உவர்நிலங்களுக்கும், நடவு பயிர்களுக்கும் இந்த மழை பேருதவியாக இருக்கும்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை