உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மழையை எதிர்பார்க்கும் விவசாயிகள்

மழையை எதிர்பார்க்கும் விவசாயிகள்

பேரையூர்: பேரையூர் தாலுகாவில் சாப்டூர், பழையூர் வண்டாரி, சந்தையூர் பகுதிகளில் கடந்தாண்டு நல்ல மழை பெய்துள்ளதால் மாமரங்களில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.தற்போது மழை பெய்தால்தான் இந்த பூக்களின் ஈரம் பட்டு அனைத்தும் காய்களாக மாறும். இல்லையெனில் வெப்பத்தால் பூக்கள் கருகி உதிர்ந்து விடும். எனவே மழையை எதிர்பார்த்து மா விவசாயிகள் காத்திருக்கின்றனர். இங்கு விளையும் மாங்காய்கள் மதுரை, தேனி, கேரளா உட்பட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன.மரங்களுக்கு எவ்வளவு தான் தண்ணீர் பாய்ச்சினாலும் மழை பெய்தால் தான் பூக்கள் உருவாகின்றன. அதேபோல் பூக்களும் மழை பெய்தால் தான் காயாகின்றன. இந்த இரண்டுக்கும் நடுவே சில நாட்கள் வெயிலும் வேண்டும். அந்தந்த நேரத்தில் மழையும், வெயில் சரியாக கிடைத்தால்தான் மகசூல் முழுமையாக தரும்.மா விவசாயிகள் கூறுகையில், ''கடந்தாண்டு விலை இருந்தது. விளைச்சல் இல்லை. இந்தாண்டு அதிகமாக பூக்கள் பூத்திருக்கின்றன. ஒரு வாரத்திற்குள் லேசான மழை பெய்யாவிட்டால் பூக்கள் உதிர ஆரம்பித்து, மகசூல் இழப்பு ஏற்படும்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை