உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 25 ஆண்டுகளாக வியாபாரம் நடக்காத உழவர் சந்தை

25 ஆண்டுகளாக வியாபாரம் நடக்காத உழவர் சந்தை

மேலுார்: மேலுார் உழவர் சந்தைக்கு பொதுமக்கள் வர மறுப்பதால் மக்களின் வரிப்பணத்தில் கட்டிய கட்டடங்கள் வீணாகி வருகின்றன.மேலுார் சந்தைப்பேட்டையில் உழவர் சந்தை 2000 நவ.1ல் துவங்கப்பட்டது. விவசாயிகள் வராத நிலையில் ரூ. 52 லட்சத்தில் மராமத்து பார்க்கப்பட்டது ஆனால் இன்று வரை உழவர் சந்தை செயல்படவில்லை.சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: நகர் மத்தியில் அமைக்காமல், வெகுதொலைவில் இடம் தேர்வு செய்ததால் 25 ஆண்டுகளாக வியாபாரம் நடக்கவில்லை. வேளாண் வணிகத்துறை அதிகாரிகளின் விழிப்புணர்வு நடவடிக்கையால் விவசாயிகள் வந்தாலும் பொதுமக்கள் வருவதில்லை. இதனால் மக்களின் வரிப்பணம் லட்சக்கணக்கில் வீணாகிறது. புதர் மண்டி விஷப் பூச்சிகளின் வாழ்விடமாக மாறி வருகிறது. அதிகாரிகள் மொத்த வியாபாரிகளை கொண்டு உழவர் சந்தையை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றனர்.வேளாண் வணிக துணை இயக்குனர் மெர்சிராணி கூறுகையில், ''உழவர்உற்பத்தியாளர் குழு, சிறுதானிய தயாரிப்பாளர்கள், மொத்த வியாபாரிகள், விவசாயிகளுக்கு சலுகைகள் வழங்கி உழவர் சந்தைக்கு வர வைக்க முயற்சிக்கிறோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை