உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விவசாயிகள் ஊர்வலம்

விவசாயிகள் ஊர்வலம்

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் உழவர் தினத்தை முன்னிட்டு விவசாய போராட்டங்களில் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வீரவணக்க ஊர்வலம் நடந்தது. மாநில துணை பொதுச் செயலாளர் நேதாஜி, துணைத்தலைவர் உதயகுமார், மாவட்ட நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், காராமணி, போஸ், காட்டுராஜா, 58 கிராம கால்வாய் பாசனசங்க நிர்வாகிகள் சின்னயோசனை, பெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் சேர்த்து குறைந்தபட்ச ஆதாரவிலை, விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்துசெய்ய முடியாத அளவில் சட்டம் இயற்றவேண்டும். தமிழ்நாட்டில் கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி