உர மேலாண்மை கருத்தரங்கு
மதுரை: மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் சமச்சீர் உர மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம் என்ற தலைப்பில் விவசாயிகளுக்கான கருத்தரங்கு நடந்தது. திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் துவக்கி வைத்து பேசுகையில், ''சமச்சீர் உர மேலாண்மை, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகத்தை பயிர்களுக்கு கடைப்பிடித்தால் பூச்சி, நோய் தாக்குதல் இன்றி மகசூல் அதிகரிக்கும்'' என்றார். புதிய ரக நெல், பயறு வகைகளை தேர்வு செய்யும் முறை குறித்து இணைப் பேராசிரியர் ஆனந்த், விளைபொருட்களை டிஜிட்டல் சந்தைப்படுத்தும் முறை குறித்து பேராசிரியை நிர்மலா பேசினர். மெட்ராஸ் பெர்டிலைஸர் நிறுவனம் ஏற்பாடுகளை செய்தது. கிளை மேலாளர் செந்தில்குமார், நிலைய விஞ்ஞானிகள் சுரேஷ், ஜோதிலட்சுமி, சரவணன் கலந்து கொண்டனர். தொழில்நுட்ப உதவியாளர்கள் மாரிமுத்து, மூவேந்திரன், ரம்யா, காயத்ரி, விஜயலலிதா ஏற்பாடுகளை செய்தனர்.