உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உழவடைக்கு ஐம்பது சதவீத மானியம்

உழவடைக்கு ஐம்பது சதவீத மானியம்

திருப்பரங்குன்றம் : சிறு தானியங்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் மானாவாரி நிலங்களில் உழவடைக்கு வேளாண் பொறியியல் துறை சார்பில் ஐம்பது சதவீத மானியம் வழங்கப்படுகிறது.மானாவாரி விவசாயிகள் சொந்த செலவில், தனியார் வாடகை இயந்திரங்கள் மூலம் உழவுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். உழவுப்பணிகளுக்கான மானியம், பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.ஆர்வமுள்ள விவசாயிகள் சிட்டா, அடங்கல், வரைபடம், சிறு குறு விவசாயி சான்று, வங்கி புத்தகத்தின் முதல்பக்க நகல், ஆதார் நகலுடன் 88255 20608ல் விபரங்கள் அறியலாம் என, உதவி பொறியாளர் காசிநாதன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை