மாணவருக்கு முதல் பரிசு
எழுமலை: எழுமலை பாரதியார் மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவர் அழகுபாண்டி. முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளான செம்மொழி நாளை முன்னிட்டு மே 17ல் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் பள்ளி மாணவர்களுக்கென நடந்த கட்டுரைப்போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்றார்.இவரைப் பாராட்டி முதல்வர் ஸ்டாலின் ரூ. 15 ஆயிரம், சான்றிதழ் வழங்கினார். மாணவர் அழகுபாண்டி தமிழ் திறனறித் தேர்விலும் வெற்றி பெற்று மாதந்தோறும் ஊக்கத்தொகை பெற்று வருகிறார். அவரை தாளாளர் பொன்கருணாநிதி, முதல்வர் ஆறுமுகசுந்தரி உட்பட பலர் பாராட்டினர்.