பூக்குழி திருவிழா
மதுரை: மதுரை ஊமச்சிக்குளம் அருகே உள்ள சந்தனமாரியம்மன் கோயிலில் பங்குனி பூக்குழி திருவிழா நடந்தது. ஏப்.11ல் கொடியேற்றத்தைத் தொடர்ந்து தினமும் அலங்காரங்களில் சுவாமி ஊர்வலம் நடந்தது. எட்டாம் நாள் விழாவான பூக்குழித் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்கள் அலகுகுத்துதல், காப்பு கட்டுதல், பரவைக்காவடி உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செய்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷே கம் நடந்தது.சந்தனமாரியம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வைக்கப்பட்டு வீதிஉலா வந்து பூக்குழி திடலை அடைந்தது. செவ்வந்தி, பச்சை, அரளிப்பூ, ரோஜா உள்ளிட்ட பூக்களால் பூக்குழியை சுற்றி அலங்கரித்தனர். பக்தர்கள் பூக்குழி இறங்கினர். இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.