உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தி.மு.க., நாடக கம்பெனிக்கு மக்கள் பூட்டுப்போடுவர் முன்னாள் அமைச்சர் உதயகுமார் கிண்டல்

தி.மு.க., நாடக கம்பெனிக்கு மக்கள் பூட்டுப்போடுவர் முன்னாள் அமைச்சர் உதயகுமார் கிண்டல்

மதுரை: 'வரும் தேர்தலில் தி.மு.க.,வின் போலி நாடக கம்பெனிக்கு மக்கள் பூட்டுப் போடுவர்' என சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதய குமார் தெரிவித்துள்ளார்.அவர் கூறியிருப்பதாவது: தி.மு.க., அரசு கடைசி சட்டசபை தொடரை நிறைவு செய்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி மக்கள் பிரச்னையை வலிமையோடு கூறும்போது, அதை எதிர்கொள்ள முடியாமல் சபை காவலர் மூலம் வெளியேற்றுவது, நேரலையை துண்டிப்பது என ஜனநாயக படுகொலை இந்த ஆட்சியில்தான் நடந்தது. தலைகுனிந்த தமிழகத்தை தலைநிமிர்ந்து நடக்கும் வகையில் 2026 ல் அ.தி.மு.க.,வுக்கு மக்கள் தீர்ப்பளிப்பர் என்று பேசியதன் அர்த்தத்தை உள்வாங்காமல், முதல்வர் ஸ்டாலின் நையாண்டியாக பேசியது வேதனையின் உச்சம்.முதல்வர் மகனாக பிறந்து முதலைமைச்சர் ஆவது சாதனை அல்ல. ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து சாதனை படைத்து வருகிறார் பழனிசாமி. இன்று தி.மு.க., திட்டங்களை, சாதனைகளை புரிந்துள்ளது என்றால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடத் தயாரா.சாதிவாரி கணக்கெடுப்பு, நுாறுநாள் வேலை திட்டத்திற்கு ரூ.3 ஆயிரம் கோடி விடுவிப்பு என மத்திய அரசு செயல்பட்டதற்கு பழனிசாமி எடுத்த முன்னெடுப்பே காரணம். தி.மு.க.,வின் போலி நாடக கம்பெனிக்கு பூட்டுப் போட மக்கள் தயாராகி விட்டனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ