மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்
03-Jan-2025
திருமங்கலம்: திருமங்கலம் அருகே உள்ள தனியார் கல்வியியல் கல்லுாரியில் முதல்வராக 42 வயது பெண் பணியாற்றினார். கல்லுாரி வேலை தொடர்பாக சென்னையில் உள்ள பல்கலை அலுவலகத்திற்கு சென்றார். அங்கு பதிவாளர் பொறுப்பில் இருந்த ராமகிருஷ்ணனிடம் அலுவல் தொடர்பாக பேசியுள்ளார்.அப்போது ராமகிருஷ்ணன் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததுடன், அநாகரிகமாக நடந்ததாக திருமங்கலம் மகளிர் போலீசில் அவர் புகார் அளித்தார். அப்பெண்ணை அடிக்கடி விசாரணைக்கு அழைத்த போலீசார், புகாருக்குள்ளான பதிவாளர் ராமகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தவில்லை. இது குறித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அப்பெண் மனு அளித்தார். ராமகிருஷ்ணனை திருமங்கலம் மகளிர் போலீசில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர். நேற்று இன்ஸ்பெக்டர் ராதிகா முன்னிலையில் ஆஜரானார். அவரிடம் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அலைபேசி உள்ளிட்ட ஆவணங்களை போலீசார் விசாரணைக்காக பெற்றனர்.
03-Jan-2025