உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நான்கு உடல்கள் தானம்

நான்கு உடல்கள் தானம்

மதுரை : மதுரை அரசு மருத்துவக் கல்லுாரிக்கு போலீசாரிடமிருந்து நான்கு உடல்கள் தானமாக வழங்கப்பட்டன.நிலைய மருத்துவ அலுவலர் சரவணன் கூறியதாவது: ஆதரவற்று அடையாளம் காணப்படாமல் இறப்போரின் உடல்கள் மதுரை அரசு மருத்துவக் கல்லுாரிகளின் படிப்புக்காக போலீசார் மூலம் ஒப்படைக்கப்படும். திருப்பரங்குன்றம் போலீசார் மூலம் 50 வயது ஆண், மாட்டுத்தாவணி போலீசார் மூலம் 40 வயது ஆண், அரசு மருத்துவமனை ஸ்டேஷன் மூலம் 47 வயது ஆண் அடையாளம் காணப்பட்ட நிலையில் உடல் தானத்திற்காக ஒப்படைக்கப்பட்டது. அண்ணாநகர் போலீசார் மூலம் அடையாளம் காணப்படாத 65 வயது ஆண் உடல் பெறப்பட்டது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ