உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நான்காம் வகுப்பு மாணவி பலி

நான்காம் வகுப்பு மாணவி பலி

உசிலம்பட்டி,:மதுரை மாவட்டம், வடுகபட்டி நித்யா நகரில் ஆடு வளர்க்கும் தொழில் செய்பவர் பூமிராஜன். இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர். உசிலம்பட்டி ஆர்.சி., பள்ளியில் மூத்த மகள் 8ம் வகுப்பு படிக்கிறார். இரண்டாவது மகள் ரித்திகா, 9, நான்காம் வகுப்பு படித்தார். நேற்று காலை 8:40 மணிக்கு அக்கா, தங்கை இருவரும் மதுரை ரோட்டில் இருந்து உசிலம்பட்டிக்கு டிரைவர் ராஜா, 22, ஓட்டி வந்த ஆட்டோவில் ஏறி பள்ளிக்கு சென்றனர். அப்போது கருமாத்துார் கல்லுாரி இரண்டாம் ஆண்டு மாணவர் பண்ணைப்பட்டி பிரதீப்குமார், 21, ஓட்டி வந்த டூ--வீலர், ஆட்டோவில் மோதியது. இதில் ரித்திகா சம்பவ இடத்திலேயே இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை