உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வங்கிக் கணக்கை அப்டேட் செய்ய மெசேஜ் அனுப்பி திருட்டு: ஏ.பி.கே., என முடியும் பைலில் வாட்ஸ்ஆப் வந்தால் ஜாக்கிரதை

வங்கிக் கணக்கை அப்டேட் செய்ய மெசேஜ் அனுப்பி திருட்டு: ஏ.பி.கே., என முடியும் பைலில் வாட்ஸ்ஆப் வந்தால் ஜாக்கிரதை

நாளுக்குநாள் சைபர் கிரைம்கள் புதுப்புது அவதாரங்கள் எடுத்து வருகின்றன. ஏ.டி.எம்.,மில் மற்றவர்களுக்கு உதவுவதுபோல் திருடுவது, 'நான் பாங்க் மேனேஜர் பேசிறேன்' என கொச்சை தமிழில் பேசுவது, உங்களுக்கு பரிசு விழுந்துள்ளது என போலி 'லிங்க்' அனுப்புவது என சொல்லிக்கொண்டே போகலாம். பயந்தோ, கொஞ்சம் சபலப்பட்டோ அவர்கள்அனுப்பும் 'லிங்கை' தொட்டு, அவர்கள் வழிகாட்டுதல்படி நடந்தால் அடுத்த நொடி நமது அத்தனை சேமிப்பும் ஒரே 'கிளிக்'கில் கரைந்துவிடும். இந்த மோசடியை உணர்வதற்குள் அந்த மோசடி நபர் தனது வங்கிக்கணக்கையும் காலி செய்துவிட்டு அடுத்தவரை மோசடி செய்ய தயாராகி விடுவார். சமீபகாலமாக சில தனியார் வங்கிகளில் இருந்து வாடிக்கையாளர்களின் அலைபேசிக்கு 'கே ஒய் சி'யை (நோ யுவர் கஸ்டமர்) அப்டேட் செய்யுங்கள் என்று லிங்க் அனுப்பப்படுகிறது. அந்த வாடிக்கையாளர் வங்கி கணக்குடன் ஆதார், போட்டோ உட்பட விவரங்களை அப்டேட் செய்வதற்காக கேட்கப்படுகிறது. அதையே மோசடி பேர்வழிகளும் வங்கியின் லோகோவை போலியாக பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். வங்கியில் இருந்து அனுப்புவது போலவே அதன் முத்திரையுடன் 'லிங்க்'கை உருவாக்கி வாட்ஸ் ஆப்பில் அனுப்புகின்றனர். 'கே.ஒய்.சி.'யை அப்டேட் செய்யாவிடில் வங்கிக் கணக்கு முடங்கிவிடும் என்றும் எச்சரிப்பர். அதற்கான 'லிங்க்'கைத் தொட்டு உள்ளே சென்றால்ஏ.டி.எம்., கார்டின் எண், பின்புறம் உள்ள சி.சி.வி.,மூன்று இலக்க எண், ஓ.டி.பி., அல்லது ஏ.டி.எம்., ரகசிய குறியீடு எண் பற்றி கேட்பர். அவசரம் அல்லது பதற்றத்தில் அதைக் கொடுப்போரின் வங்கிப் பணத்தை வழித்தெடுத்து விடுகின்றனர். எனவே இவ்விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக ஏ.பி.கே., எனமுடியும் பைலில் வரும் 'லிங்க்'குகளை பயன்படுத்த வேண்டாம் என்று சில வங்கிகளே எச்சரித்துஉள்ளன. அதை கவனத்தில்கொள்வது நல்லது.இந்திய ரிசர்வ் வங்கி, 'இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக எந்த கொடுக்கல்வாங்கலும் இல்லையெனில் வங்கி கணக்கு செயல்படாத நிலை ஏற்படும். எனவே உங்கள் வங்கியின் எந்தக் கிளையிலும், அல்லது வீடியோ மூலம் உங்கள் கே.ஒய்.சி.,யை அப்டேட் செய்யுங்கள். வங்கியை தொடர்பு கொள்ளுங்கள்' என்று அறிவுறுத்தியுள்ளது. ஆனால் சில வங்கிகள்கே.ஒய்.சி., யை அப்டேட் செய்ய சொல்வதாலும், லிங்க் அனுப்புவதாலும் மோசடி பேர்வழிகளும் அதை போலியாக அனுப்பி மோசடியில் ஈடுபடுகின்றனர்.

உடனே 1930ஐ அழையுங்கள்

ஆன்லைனில் பணம் மோசடி தொடர்பான சைபர் குற்றங்களால் பாதிக்கப்படுவோர் உடனடியாக தாமதிக்காமல் 1930 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்புக்கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். ஒரே நேரத்தில்பலரும் இந்த எண்ணை தொடர்பு கொண்டே இருப்பதால் 'பிஸி'யாக இருக்கும். இருப்பினும் தொடர்ந்து முயற்சித்து தொடர்பு கொள்ள வேண்டும். அல்லது www.cybercrime.gov.inல் புகார் செய்ய வேண்டும். அப்போதுதான் போலீசார் விசாரணையை துவங்க வசதியாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

bharathi
டிச 24, 2024 12:10

no one respond in 1930 also the site does not register the complaint that easily. after all these done you need to walk to cyber crime police and bribe them to get the complaint registered.


அப்பாவி
டிச 24, 2024 09:39

ஒருமுறை உரிய ஆவணங்களுடன் துவக்கப் பட்ட கணக்கை ஏன் முடக்க வேண்டும்?


அப்பாவி
டிச 24, 2024 09:38

எல்லாம் இந்த கெவர்மென்ட் போடும் புண்ணாக்கு கெடுபுடிகள்தான் காரணம். குற்றவாளிகளைப்.புடிச்சு தண்டிக்க துப்பில்லைன்னாலும் கே.ஒய்.சி ந்னு டார்ச்சர் குடுத்து ஒழுங்கா இருக்குறவங்களை கொடுமப்படுத்துறாங்க.


புதிய வீடியோ