மேலும் செய்திகள்
கண் சிகிச்சை இலவச முகாம்
15-May-2025
மதுரை: தானம் அறக்கட்டளை, சுகம் அறக்கட்டளை சார்பில் கொட்டாம்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. மேலுார் தங்கமயில் ஜூவல்லரி கிளை, பெண்கள் வட்டார களஞ்சியம், அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் இணைந்து ஏற்பாடுகளை செய்தன. ஜூவல்லரி முதுநிலை மேலாளர் செல்வம் முகாமை தொடங்கி வைத்தார். 234 பேர் பயன்பெற்றனர். இதில் 64 பேருக்கு கண்புரை நோய் கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சைக்காக அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். ஏற்பாடுகளை திட்ட நிர்வாகி செந்தில்குமார், மண்டல ஒருங்கிணைப்பாளர் முத்தையா செய்தனர்.
15-May-2025