தங்கும் வசதியுடன் இலவச நர்சிங் பயிற்சி
மதுரை: மதுரையில் லட்சுமி அம்மாள் அறக்கட்டளை சார்பில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு தங்கும் வசதியுடன் கூடிய ஜன.25 முதல் இலவச நர்சிங் பயிற்சி அளிக்கப்படுகிறது. மூன்றுமாத கால பயிற்சிக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற 35 வயதுக்குட்பட்ட பெண்கள் பங்கேற்கலாம். சீருடை, உணவு, தங்குமிடம், பாடப்புத்தகம், உபகரணங்கள் இலவசம். அரசு சான்றிதழ் வழங்கப்படும். ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, கல்விச்சான்றிதழ் நகல், போட்டோவுடன் அணுக வேண்டிய முகவரி: பெட்கிராட், வடக்குவாசல், எஸ்.எஸ்.காலனி, மதுரை, அலைபேசி: 86100 12770.