தென்னை விவசாயிகளுக்கு இலவச ஒட்டுண்ணி அட்டை
திருப்பரங்குன்றம்: தென்னை மரங்களில் வெள்ளை ஈக்களின் தாக்குதலை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்தவும், தென்னை மரங்களை வலுப்படுத்தவும் மஞ்சள் ஒட்டும் பொறி, ஒட்டுண்ணி அட்டையை திருப்பரங்குன்றம் தோட்டக்கலை துறை அலுவலகத்தில் இலவசமாக பெறலாம். உதவி இயக்குனர் திவ்யா கூறியதாவது: திருப்பரங்குன்றம் வட்டார தென்னை விவசாயிகள் திருப்பரங்குன்றம் தாலுகா ஆறுமுகம் 99941 41379, மதுரை மேற்கு ஜெயபாலன் 86678 79177, மதுரை தெற்கு ஷாலினி 63691 48798ல் தொடர்பு கொள்ளலாம். அல்லது தோட்டக்கலை அலுவலகத்தில் சிட்டா, அடங்கல், ரேஷன், ஆதார் கார்டு நகல், வங்கி பாஸ்புக் ஆகியவற்றை கொடுத்து பெற்றுக் கொள்ளலாம் என்றார்.