உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  நீதிபதி தேர்வு இலவச பயிற்சி

 நீதிபதி தேர்வு இலவச பயிற்சி

மதுரை: மாவட்ட நீதிமன்ற நீதிபதி பணியிடங்களுக்கான போட்டித் தேர்விற்குரிய இலவச பயிற்சி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எம்.பி.ஏ.,வழக்கறிஞர்கள் சங்கத்தில் துவங்கியது. தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசுகையில், ''தமிழகம், ராஜஸ்தானில் பெண் நீதிபதிகள் அதிகம். மேலும் அதிக பெண் நீதிபதிகள் தேர்வாக வாய்ப்புள்ளது'' என்றார். உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பேசுகையில், ''மாவட்ட நீதிபதிகளுக்கான காலிப் பணியிடம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இளம் வழக்கறிஞர்களுக்கு வாய்ப்பு உள்ளது. முன்கூட்டியே இச்சங்கம் பயிற்சியை துவக்கியது பாராட்டுக்குரியது'' என்றார். நீதிபதி அனிதா சுமந்த் பேசுகையில், ''இம்மையத்தில் ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களில் 28 பேர் சிவில் நீதிபதிகளாக தேர்வாகியுள்ளனர்'' என்றார். துணைத் தலைவர்கள் மகேஷ்பாபு, பரேக்குமார், சுபபிரியா பங்கேற்றனர். பொருளாளர் ராஜா நன்றி கூறினார். வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பயிற்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை