மேலும் செய்திகள்
மதுரை மேயர் இந்திராணி ராஜினாமா நாளை புதிய மேயர் தேர்வு
5 hour(s) ago
மதுரை : மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி (தி.மு.க.,)நேற்றுராஜினாமா செய்துள்ளார். மாநகராட்சி தேர்தலில் 67 வார்டுகளை தி.மு.க., கைப்பற்றியது. அப்போதைய பகுதிச் செயலாளரான பொன்வசந்த், அமைச்சர் தியாகராஜனின் தீவிர விசுவாசியாக இருந்தார். அதற்கு பரிசாக அவரது மனைவி இந்திராணிக்கு மேயர் பதவியை அமைச்சர் பெற்றுத்தந்தார். 2022, மார்ச் 4 ல் அவர் பதவியேற்றார். அமைச்சர் நினைப்பதை செய்து முடிக்கும் 'விசுவாச' மேயராக செயல்பட்டார், இந்திராணி. காலப்போக்கில் பொன்வசந்த் நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்தி அமைச்சருக்கு தெரியாமல் பல டீலிங்குகளை மேற்கொண்டார். அப்போது கமிஷனராக பொறுப்பேற்ற பலர் மேயரின் கணவரின் அரசியலை எதிர்கொள்ள முடியாமல் மாறுதல் பெற்றுச் சென்றனர். ஒரு கட்டத்தில் அமைச்சரிடம் கருத்துவேறுபாடு ஏற்பட பொன்வசந்த் தனிப்பாதையில் பயணித்தார். தலைமையில் உள்ள முக்கிய தலைவர்களை சரிக்கட்டி, மாநகராட்சியில் தொடர்ந்து கோலோச்சினார். இதையடுத்து மேயர் தரப்பை அமைச்சரும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் தான் மாநகராட்சி சொத்துவரி வரி முறைகேடு விவகாரம் பூதாகரமாகியது. விசுவாசத்தில் இருந்து விலகிய பொன்வசந்த்தை தியாகராஜன் கைவிட்டதால், கைது செய்யப்பட்டார். ஆனாலும் மேயராக இந்திராணி தொடர தியாகராஜன் சம்மதம் தெரிவித்தார். இதற்கிடையே அமைச்சர் மூர்த்தி, நகர் செயலாளர் தளபதி எம்.எல்.ஏ., காய் நகர்த்தலில் புதிய மேயர் தேர்வு செய்ய வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டது. தலைமையும் சம்மதம் தெரிவித்து அதற்கான பொறுப்பை அமைச்சர் நேருவிடம் கொடுத்தது. யார் ஆதரவாளர்கள் புதிய மேயராக தேர்வு செய்ய வேண்டும் என்ற அமைச்சர்களுக்குள் ஏற்பட்ட போட்டியால் இந்திராணியே மேயராக தொடரும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கைதான பொன்வசந்த் ஜாமினில் வெளிவந்த நிலையில், மீண்டும் மாநகராட்சி நிர்வாகத்தை தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர முயற்சித்தார். இதனால் அதிருப்தியான தலைமை, இந்திராணியை சென்னைக்கு அழைத்து ராஜினாமா கடிதத்தை பெற்றது.
5 hour(s) ago