உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் காந்தி ஜெயந்தி விழா

மதுரையில் காந்தி ஜெயந்தி விழா

மதுரை: மதுரை, திருநகர், திருமங்கலத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி பல்வேறு அமைப்பினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.* மதுரை மேலமாசிவீதி கதர் விற்பனை நிலையத்தில் காந்தி சிலைக்கு அமைச்சர் மூர்த்தி மாலை அணிவித்து சிறப்பு விற்பனையை துவக்கினார். கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், எம்.எல்.ஏ.,க்கள் தளபதி, பூமிநாதன் பங்கேற்றனர்.* மதுரை நகர் பா.ஜ., சார்பில் தலைவர் மகா சுசீந்திரன் தலைமையில் காந்தி மியூசியத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்தனர். பொது செயலாளர் கருட கிருஷ்ணன், நிர்வாகிகள் சந்தோஷ் சுப்பிரமணியன், பொருளாளர் நவீன் அரசு, பிரசார பிரிவு செயலாளர் ரிஷி, ஊடகப்பிரிவு செயலாளர் வேல்பாண்டியன் பங்கேற்றனர்.திருமங்கலம்: தெற்கு தெரு காந்தி சிலைக்கு இலக்கிய பேரவை செயலாளர் சங்கரன், பொருளாளர் தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு அறிவியல் இயக்க திருமங்கலம் கிளை பொருளாளர் முனீஸ்வரி, சர்வோதய சங்க நிர்வாகிகள் செந்தில்குமார், ராஜு, அங்குசாமி, அன்னை வசந்தா டிரஸ்ட் நிறுவனர் ரகுபதி, தலைவர் அமுதா, நகர் நல சங்க செயலாளர் இருளப்பன், கம்பன் கழக பொருளாளர் பிரசன்னா முருகன், த.மு.எ..க.ச., கிளைச் செயலாளர் பாண்டிச் செல்வி, தலைவர் சசிகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.* திருநகர் ஹார்விபட்டி ஸ்ரீமான் எஸ்.ஆர்.வி. மக்கள் நல மன்றம் சார்பில் காந்தி படத்திற்கு மன்ற தலைவர் அய்யல்ராஜ் மாலை அணிவித்தார். பொருளாளர் அண்ணாமலை, துணைத் தலைவர் காளிதாசன், செயலாளர் குலசேகரன் பங்கேற்றனர்.* திருநகர் மக்கள் மன்ற விழாவில் தலைவர் செல்லா தலைமை வகித்தார். துணை செயலாளர் கிருஷ்ணசாமி வரவேற்றார். துணை தலைவர் பொன் மனோகரன், துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி தமிழ் துறை தலைவர் பரிமளா பேசினார். திருநகர் ஜெயன்ட்ஸ் குரூப் ஆனந்தராஜ், திருநகர் நடைபயிற்சி நண்பர்கள் குழு சர்வேஸ்வரன், கவுன்சிலர் இந்திராகாந்தி பங்கேற்றனர்.* காமராஜர் மக்கள் கட்சி சார்பில் தலைவர் அய்யல்ராஜ் மாலை அணிவித்தார். கொள்கை பரப்பு செயலாளர் ஈஸ்வரன், பொருளாளர் உதயகுமார், செயற்குழு உறுப்பினர் தயாநிதி, திருமங்கலம் தொகுதி தலைவர் செல்ல பாண்டியன் பங்கேற்றனர். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் சண்முகசுந்தரம் மாலை அணிவித்தார். பெருங்குடி சரஸ்வதி நாராயணன் கல்லுாரியில் முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். துணை முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார். டீன் சரவணக்குமார் பங்கேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை