தெற்கு வெளிவீதியில் குப்பை சகிக்கலை
மதுரை: மதுரை தெற்குவெளிவீதி காஜாதெரு ரோட்டில் குப்பையை கொட்டுகின்றனர். இதேபோல் கிருதுமால் நதியும் குப்பை, கழிவுநீரால் நிரம்பி உள்ளது. பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் நோய்த்தொற்றுடன் கொசுத்தொல்லையும் அதிகரிக்கிறது. மாடுகளையும் ரோட்டை ஆக்கிரமித்து கட்டுகின்றனர்.இதனால் போக்குவரத்து இடையூறாகவும், அச்சுறுத்தும் விதமாகவும் உள்ளது. மாநகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்படும் என்ற அறிவிப்பு பலகை வைத்தும் மக்களிடம் மாற்றம் வரவில்லை. குப்பை வண்டிகள் வாரத்திற்கு மூன்று முறை மட்டுமே வருகின்றன. வீட்டில் உள்ள குப்பையை மட்டுமே வாங்குகின்றனர் தெருக்களை சுத்தம் செய்வதில்லை. கேட்டால் ஆட்கள் பற்றாகுறை என பதில் கூறுகின்றனர். கிருதுமால் நதியை துார்வாரி சுத்தப்படுத்த வேண்டும். போதுமான ஆட்களை பணியில் அமர்த்த வேண்டும். அடிப்படை குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என மக்கள் புலம்புகின்றனர்.