பொதுக்குழு கூட்டம்
மதுரை : மதுரையில் ஐதராபாத் கீழ் இயங்கும் இந்திய தர வட்ட அமைப்பு கிளையின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. தலைவர் சங்கர சுப்பிரமணியன் வரவேற்றார். பொருளாளர் சதீஷ் குமார் பட்ஜெட் திட்டங்களை சமர்ப்பித்தார். பொதுக்குழு, தற்போதுள்ள நிர்வாகிகளை மீண்டும் தொடர ஒருமனதாக தேர்ந்தெடுத்தது. அமெரிக்கன் கல்லுாரி பொருளாதாரத் துறை முன்னாள் தலைவர் முத்துராஜா, ஊடக ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார். செயலாளர் சுகுமாறன் நன்றி கூறினார்.