உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சந்தையை எங்கள் சங்கத்திடம் கொடுங்கள் தினமலர் செய்தியால் உசிலம்பட்டி விவசாயிகள் ஆவேசம்

சந்தையை எங்கள் சங்கத்திடம் கொடுங்கள் தினமலர் செய்தியால் உசிலம்பட்டி விவசாயிகள் ஆவேசம்

உசிலம்பட்டி : 'சந்தை முழுவதும் கழிவுநீரும், குப்பையுமாக உள்ளதால் அதனை ஆறுமாதம் எங்களிடம் தாருங்கள், சுத்தம் செய்கிறோம்' என குறைதீர் கூட்டத்தில் தினமலர் நாளிதழ் செய்தியை சுட்டிக்காட்டிய விவசாயிகள் ஆவேசமாக பேசினர்.உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பாலகிருஷ்ணன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. விவசாய மின் இணைப்புக்கு ஸ்மார்ட் மீட்டர் பொறுத்தக்கூடாது. விவசாய நகைக்கடனை ஆண்டு தோறும் புதுப்பித்துக் கொள்வது நடைமுறையில் உள்ளது. ஆனால் தற்போது முழுமையாக பணத்தை கட்டி திருப்பிய பின்பே மறு அடகு வைக்க முடியும் எனக் கூறுவதையும் நிறுத்த வேண்டும்.உசிலம்பட்டி, செல்லம்பட்டி பகுதி உரம், பூச்சி மருந்து கடைகளில் இருப்பு விபரம், விலைப்பட்டியல் இல்லை. மருந்து வாங்கினால் ரசீது கொடுப்பதில்லை. அதிகாரிகள் ஆய்வு நடத்தி முறையாக செயல்படாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 58 கிராம கால்வாய் திட்டத்தில் சடச்சிபட்டி கண்மாய்க்கு நீர் செல்லும் பாதையை கையகப்படுத்தி கால்வாய் அமைக்க வேண்டும். ஊருணி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். உசிலம்பட்டி - செக்கானுாரணி சிட்டி பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும். உசிலம்பட்டி சந்தையில் தேங்கிய கழிவுநீர் கால்வாய் குறித்து 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வந்துள்ளது. நகராட்சி, ஊராட்சிக்கு இடையே துாய்மைப் பணிகள் நடக்கவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு இருந்தால், துாய்மைப்பணியை செய்யாமல் தவிர்ப்பது சரியா. சந்தை பராமரிப்பு பணியை 6 மாதங்கள் எங்களிடம் கொடுத்தால், சுத்தப்படுத்தி தருகிறோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி