உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆடு வளர்க்க பயிற்சி

ஆடு வளர்க்க பயிற்சி

திருப்பரங்குன்றம்: தேசிய கால்நடை இயக்கம் சார்பில் 50 சதவீத மானியத்தில் ஆடு வளர்ப்பு பண்ணை அமைப்போருக்கு பல்கலை சான்றிதழுடன் கூடிய ஒரு நாள் பயிற்சி முகாம் திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை பயிற்சி ஆய்வு மையத்தில் நவ. 27ல் நடக்கிறது. ஆர்வமுள்ள கால்நடை வளர்க்கும் விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் பங்கேற்கலாம். விபரங்களுக்கு 0452 - - 248 3903ல் தொடர்பு கொள்ளலாம் என மைய தலைவர் டாக்டர் சிவசீலன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை