ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை
மேலுார்: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் மேலுார் சந்தைப்பேட்டையில் ஆட்டுச் சந்தை நடந்தது. பல்வேறு மாவட்ட வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். 10 கிலோ முதல் 12 கிலோ வரை எடை கொண்ட ஆடுகள் ரூ. 8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனையானது. நேற்று ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக விவசாயிகள், வியாபாரிகள் தெரிவித்தனர்.