உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அரசாணை நகல் எரிப்பு போராட்டம்

அரசாணை நகல் எரிப்பு போராட்டம்

மதுரை : மதுரையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கம் சார்பில் அரசாணை எண் 140ன் நகலை தீயிட்டு எரிக்கும் போராட்டம் நடந்தது.சாலைப் பணியாளர்களுக்கு 41 மாத பணிநீக்க காலத்தை, உயர்நீதி மன்ற உத்தரவுப்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து, தனியார்மயமாக்கவும், பணியிடங்களை ரத்துசெய்யவும் வழிவகுக்கும் மாநில அரசாணை 140 ஐ ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அழகர்கோயில் ரோட்டில் உள்ள நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு இந்த போராட்டம் நடந்தது.சங்க கோட்ட தலைவர்கள் மணிமாறன், மாரி, ராஜா, நந்தகோபால் தலைமை வகித்தனர். கோட்ட செயலாளர்கள் மனோகரன், ராஜா, அருள்தாஸ், பாலமுருகன் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் தமிழ் துவக்கி வைத்து பேசினார். அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் நீதிராஜா சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் சந்திரபோஸ், மாநில துணைத் தலைவர் ராஜமாணிக்கம் உட்பட பலர் பங்கேற்றனர். நிர்வாகி மாணிக்கம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை