உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வீட்டுக்கடன் வட்டிவீதத்தை குறைக்க அரசுப் பணியாளர்கள் எதிர்பார்ப்பு எட்டு சதவீதத்திற்கும் கீழ் நிர்ணயிக்க வேண்டும்

வீட்டுக்கடன் வட்டிவீதத்தை குறைக்க அரசுப் பணியாளர்கள் எதிர்பார்ப்பு எட்டு சதவீதத்திற்கும் கீழ் நிர்ணயிக்க வேண்டும்

மதுரை: 'அரசுப் பணியாளர்களுக்கு வீட்டுக்கடனுக்கான வட்டிவீதத்தை 8 சதவீதத்திற்கும் கீழ் குறைக்க வேண்டும்' என தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழக அரசின் அனைத்துத் துறை பணியாளர்களுக்கும் வீட்டுக் கடன் வசதியை அளிக்க கலெக்டர் அலுவலகங்களில் அலுவலர்கள் உள்ளனர். வீட்டுக்கடன் பெறும் அரசுப் பணியாளர்களுக்கு வட்டியுடன் தொகை சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும். இந்தக் கடனுக்கான வட்டி வீதம் பல ஆண்டுகளாக 9 சதவீதமாக உள்ளது. அதேசமயம் ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்படி அனைத்து வங்கிகளிலும் வீட்டுக் கடன் வட்டி வீதம் 8 சதவீதத்திற்கும் கீழ் குறைக்கப்பட்டுள்ளது. வங்கிகளைக் காட்டிலும் ஒரு சதவீதம் அதிகம் என்பது சில ஆயிரங் களைத் தொடும் எனவே இந்த வட்டி வீதத்தை குறைக்க வேண்டும் என அரசுப் பணியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். அரசுப் பணியாளர் சங்க மாநில துணைத் தலைவர் ஜெயகணேஷ், மாவட்ட செயலாளர் முத்துராஜா, பொருளாளர் சேகர் கூறுகையில், ''தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட திருமணக் கடன் நிதிக்கான வட்டி 8 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் வீடுகட்டும் முன்பணம் மட்டும் பல ஆண்டு களாக 9 சதவீதமாகவே உள்ளது. அதனையும் திருமண கடனுக்கான வட்டி வீதம் போல நிர்ணயிக்க வேண்டும்'' என்றனர். மேலும் அவர்கள் கூறிய தாவது: கிராம உதவியாளர்கள், சத்துணவு, அங்கன்வாடி போன்ற துறைகளுக்கும் மாவட்ட அளவில் அதிகாரிகள் உள்ளனர். இத்துறையில் ஊழியர்கள் நியமனம், இட மாற்றம் போன்றவை அரசியல்வாதிகள், அதிகாரிகளின் சிபாரிசு மூலம் நடப்பதும், திரைமறைவில் ஏலமிடுவது போன்ற நடைமுறையும் இருந்து வருகிறது. இத்துறையில் தகுதியானவர்களை நியமிக்க அரசுப் பணியாளர், மருத்துவ பணியாளர்களுக்கு தேர்வாணையம், ஆசிரியர் களுக்குத் தேர்வு வாரியம் போல தனித்தேர்வு வாரியம் அமைக்கலாம். இதன்மூலம் வெளிப்படை தன்மை, அரசியல் தலையீடு இன்றி நேர்மையாக தேர்வு நடைபெற வாய்ப்பு இருக்கும் என்றனர். இதுதவிர நெடுஞ் சாலைத் துறையில் நீண்ட காலமாக வெளியிடப்படாத இளநிலை உதவியாளர் முதல் அனைத்து பதவிகளுக்குமான பணிமூப்பு பட்டியலை உடனே வெளியிட வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !