மேலும் செய்திகள்
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
24-Jun-2025
திருமங்கலம்: கிழவனேரிக்கு செல்ல திருமங்கலம் - சேடப்பட்டி மெயின் ரோட்டில் இருந்து 500 மீட்டர் துாரம் ஊருக்குள் நடந்து செல்ல வேண்டும். இப்பாதையில் 300 மீட்டர் துாரத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு பேவர் பிளாக் கற்கள் பதியப்பட்டன. அரசு பள்ளியில் இருந்து மீதி 200 மீட்டர் துாரத்திற்கு கற்கள் பதிக்கப்படவில்லை.இப்பகுதியில் முறையான சாக்கடை வசதி இல்லாததால் வீடுகளின் கழிவுநீர், குடிநீர் குழாயில் இருந்து வீணாகும் நீர் ரோட்டில் தேங்கி நிற்கிறது. ரோடு பணிகள் நிறைவடையாத நிலையில் சாக்கடை பணிகளும் முழுமை பெறவில்லை. இந்த ரோட்டை முழுமையாக முடிப்பதற்காக 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ரூ. 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. டெண்டர் விடப்பட்டு வேலைகள் தொடங்கப்படாததால் திட்டம் காலாவதியாகி நிதி திருப்பி அனுப்பப்பட்டு விட்டது.வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரகலா கூறுகையில், ''மீண்டும் திட்டத்தை செயல்படுத்த மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் பணி தொடங்கப்படும்'' என்றார்.
24-Jun-2025