அரசுப்பள்ளி : மக்கள் மனு
திருநகர்: மதுரை மாநகராட்சி 96வது வார்டில் சிறப்பு முகாம் நடந்தது. கவுன்சிலர் விஜயா மனுக்கள் பெற்றார். ஹார்விபட்டி பூங்கா சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். எஸ்.ஆர்.வி. நகர் வழியாக நிலையூர் கண்மாய்க்கு வைகை அணை தண்ணீர் செல்லும் கால்வாயை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். எஸ்.ஆர்.வி. மக்கள் நல மன்றத் தலைவர் அயல்ராஜ் தலைமையில் நிர்வாகிகள், ஹார்விபட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைக்க கோரிக்கை மனு அளித்தனர்.