உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பட்டமளிப்பு விழா

பட்டமளிப்பு விழா

மதுரை: மதுரை யாதவா பெண்கள் கல்லுாரியின் 41வது பட்டமளிப்பு விழா தலைவர் அருண் போத்திராஜ் தலைமையில் நடந்தது. டீன் இந்திரா ராணி வரவேற்றார். செயலாளர் இந்திராணி முன்னிலை வகித்தார். 891 மாணவிகளுக்கு பட்டம் வழங்கி முதல் பார்ட்னர்ஸ் நிறுவனர் குமார் வேம்பு பேசியதாவது: பெண்கள் படித்து, சம்பாதிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு உள்ளது. வேலைக்குச் செல்வது அவசியமாகிறது. வளர்ச்சியடைந்த நாடுகளின் முன்னேற்றத்தில் பெண்களின் பங்கு முக்கியம். அவர்கள் வளர்ச்சி குறியீட்டின் அடையாளமாக திகழ்கின்றனர். வட மாநிலங்களை விட தமிழகத்தில் பெண் தொழிலாளர்கள் பங்கேற்பு விகிதம் 5 மடங்கு அதிகம் என்றார்.முதல்வர் புஷ்பலதா, இளைஞர் நலன் இயக்குநர் திவ்யா, தேர்வு கட்டுப்பாட்டாளர் வித்யா, நிர்வாக அலுவலர் சுந்தரராஜன், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ