உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கோயில்களில் குருப்பெயர்ச்சி

கோயில்களில் குருப்பெயர்ச்சி

சோழவந்தான்: சோழவந்தான், குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது.இக்கோயில் முன் குரு பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. நேற்று மதியம் 1:24 மணிக்கு ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு குருபகவான் இடபெயர்ச்சியானார். இதையொட்டி குரு பகவானுக்கு அபிஷேகம், தீபாரதனை நடந்தது. முன்னதாக அனைத்து ராசிக்காரர்களுக்கும் பரிகார யாக பூஜைகளை பட்டர்கள் பாலாஜி என்ற சடகோபன், ஸ்ரீதர், ஸ்ரீபாலாஜி, ராஜா குழுவினர் செய்தனர். அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் சித்ரா, எம்.எல்.ஏ.,வெங்கடேசன், பங்கேற்றனர். ஏற்பாடுகளை தக்கார் மாலதி, அறநிலையத்துறை ஆய்வாளர் ஜெயலட்சுமி, செயல் அலுவலர் கார்த்திகைச்செல்வி செய்திருந்தனர். சமயநல்லுார் டி.எஸ்.பி., ஆனந்தராஜ் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார்.* சோழவந்தான் பிரளயநாத சிவன் கோயிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு குரு பகவான், தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. ஏற்பாடுகளை தக்கார் இளமதி, எம்.வி.எம்.குழும தலைவர் மணிமுத்தையா, கவுன்சிலர்கள் வள்ளி மயில், மருதுபாண்டியன் செய்திருந்தனர்.*அலங்காநல்லுார் தர்ம சாஸ்தா கோயிலில் குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு சிறப்பு யாகசாலை பூஜை நடந்தது. நவகிரகங்களுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடந்தன. தட்சிணாமூர்த்திக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம், நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி சீனிவாசன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை