கையுந்து பந்து போட்டி அரசுபள்ளி தேர்வு
மதுரை: மதுரை ம.சத்திரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மணவர்கள் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடந்த வருவாய் மாவட்ட அளவிலான கையுந்து பந்து போட்டியில் பங்கேற்றனர். 19 வயதுக்குட்பட்டோர் போட்டியில் இப்பள்ளியின் மாணவர்கள் வெற்றி பெற்று முதல் பரிசை பெற்றனர். இதன் மூலம் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். இந்த மாணவர்களை தலைமை ஆசிரியர் உமாமகேஸ்வரி, உடற்கல்வி ஆசிரியர்கள் காசிராஜன், சரவணகுமார், சுமித்ரா உட்பட பலரும் பாராட்டினர்.