மேலும் செய்திகள்
லீக் ஹேண்ட்பால் போட்டி
13-May-2025
மதுரை: பன்யான் அறக்கட்டளை, மதர் குளோப் ரெவலுஷேனரி அகாடமி சார்பில் திருநகரில் 14 வயது, 19 வயது ஆடவர் பிரிவு லீக் ஹேண்ட்பால் போட்டி நடந்தது. 14 வயது பிரிவு போட்டி முடிவுகள்
முதல் அரையிறுதிப் போட்டியில் டால்பின் அணி 19 - 5 கோல் வித்தியாசத்தில் தேவசகாயம் அணியை வீழ்த்தியது. அரையிறுதிப் போட்டியில் மதர் குளோப் அகாடமி 12 -- 7 கோல் வித்தியாசத்தில் ஓம் சாதனா அணியை வீழ்த்தியது. இறுதிப் போட்டியில் டால்பின் அணி 30 - 6 கோல் வித்தியாசத்தில் மதர் குளோப் அணியை வீழ்த்தி முதலிடம் பெற்றது. 3ம் இடத்திற்கான போட்டியில் ஓம் சாதனா 7 - 5 கோல் வித்தியாசத்தில் தேவசகாயம் அணியை வீழ்த்தியது. 19 வயது பிரிவு
முதல் அரையிறுதிப் போட்டியில் மதர் குளோப் 'பி' அணி 16 - 13 கோல் வித்தியாசத்தில் ஓம் சாதனா அணியை வீழ்த்தியது. அடுத்த அரையிறுதியில் மதர் குளோப் 'பி' அணியுடன் தேவசகாயம் அணி பங்கேற்காத நிலையில் 'பி' அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப் போட்டியில் மதர் குளோப் அணி 10 - 5 கோல் வித்தியாசத்தில் 'பி' அணியை வீழ்த்தியது.14 வயது பிரிவில் லீக் சிறந்த ஆட்டக்காரர்களாக மதர் குளோப் தனுஷ், டால்பின் வினய்தேவ், ஓம் சாதனா கார்த்திக் சஜன், தேவசகாயம் வேல்குமரன், 19 வயது பிரிவில் ஓம் சாதனா பள்ளி திருநிதிரன் சக்தி, மதர் குளோப் அகாடமி கவுதம், லட்சுமணன் தேர்வாகினர்.கவுன்சிலர் இந்திராகாந்தி, சமூகசேவகர் நாகராஜன், ராணுவ விளையாட்டு வீரர் சந்திரசேகரன் பரிசு வழங்கினர். உடற்கல்வி ஆசிரியர்கள் அன்பு, மோகன், சசி, பரமாத்மா, கார்த்திக், குமார் பாராட்டினர். ஏற்பாடுகளை அகாடமி தலைவர் அன்பரசன் செய்திருந்தார்.
13-May-2025