உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மழையால் மகிழ்ச்சி

மழையால் மகிழ்ச்சி

பேரையூர்: பேரையூர் பகுதியில் நேற்று காலை பெய்த ஒரு மணி நேர மழையால், விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர். இப்பகுதியில் கடந்த செப்டம்பரில் நெல், மக்காச்சோளம், சோளம், பருத்தி, கம்பு, குதிரைவாலி உள்ளிட்ட பயிர்கள் மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்தனர். தற்போது அந்தப் பயிர்கள் வளர்ந்து களை எடுக்கும் பணி, பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணி நடக்கிறது. இந்நிலையில் நேற்று காலை ஒரு மணி நேரம் பெய்த மழை பயிர் வளர்ச்சிக்கு உதவும் என விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ