மேலும் செய்திகள்
சிறுதானிய உணவு தயாரிக்க பெண்களுக்கு இலவச பயிற்சி
11-Sep-2025
மதுரை: மத்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், அசஞ்சர் நிறுவனம் சார்பில் மதுரை எஸ்.எஸ்.காலனி பெட்கிராட் நிறுவனத்தில் மூலிகை சோப்பு உட்பட வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. 26 நாட்கள் காலை 10:00 முதல் மதியம் 2:00 வரை பயிற்சி நடக்கிறது. இதில் மூலிகை, கிளிசரின், காஸ்டிக் சோடா கலந்த சோப்பு தயாரித்தல், சலவைத்துாள், பாத்திரம் துலக்கும் துாள், திரவம், பினாயில், ஹேண்ட்வாஷ், ஷாம்பூ, முக கிரீம், லிம் பாம், இயற்கை நறுமணப் பொருட்கள் தயாரிப்பதற்கான செய்முறை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும். குறைந்தது 8வது தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம். தொழில் துவங்குவதற்கான எஸ்.எஸ்.ஐ., சான்றிதழ், மாவட்ட தொழில் மையத்தின் குடிசைத்தொழில் சான்று, சோப்பின் தன்மை அறியும் ஆய்வக பரிசோதனை சான்று பெறவும், தொழில் துவங்குவதற்கான வங்கிக்கடன் பெற உதவி செய்யப்படும். அலைபேசி: 90950 54177.
11-Sep-2025