உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜல்லிக்கட்டு காளையை  அனுமதிக்க வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி

ஜல்லிக்கட்டு காளையை  அனுமதிக்க வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி

மதுரை, : பாலமேடு சிங்கராஜன். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:பொங்கலையொட்டி பாலமேட்டில் பொது மகாலிங்கசாமி மடத்துக்குழு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்துகிறது. மற்ற அனைத்து சமூக உறவின்முறை கோயில்களுக்குரிய காளைகளை ஜல்லிக்கட்டு விழா துவக்கத்தின்போது மரியாதைக்குரிய (கரை) மாடுகளாக அவிழ்த்துவிட அனுமதிக்கின்றனர்.பாறை கருப்பசாமி கோயில் காளையை அனுமதிப்பதில்லை. பாகுபாடு காட்டப்படுகிறது. இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. பாறை கருப்பசாமி கோயில் காளையை ஜன.,16 ல் நடக்கும் ஜல்லிக்கட்டில் அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு: எந்தெந்த காளைகளை அனுமதிப்பது என ஆர்.டி.ஓ., ஜன.,9ல் உத்தரவு பிறப்பித்துள்ளார். இம்மனு ஏற்புடையதல்ல. தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை