உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு மறுவிசாரணை கோரிய மனு தள்ளுபடி உயர்நீதிமன்றம் உத்தரவு

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு மறுவிசாரணை கோரிய மனு தள்ளுபடி உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொல்லப்பட்ட வழக்கில் சாட்சிகளிடம் மீண்டும் குறுக்கு விசாரணை கோரிய எஸ்.ஐ., மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ், மகன் பென்னிக்சை போலீசார் 2020 ஜூன் 19 ல் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர். கோவில்பட்டி கிளைச் சிறையில் இருவரும் இறந்தனர். சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட சில போலீசார் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது சி.பி.ஐ., கொலை வழக்கு பதிந்தது. மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது.சம்பவ இடத்திலிருந்த போலீஸ்காரர் ரேவதி உள்ளிட்டோரிடம் வாக்குமூலம் பதிவு செய்த சம்பந்தப்பட்ட துாத்துக்குடி மாவட்ட நீதிபதி, பிரேத பரிசோதனை செய்த டாக்டர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். அவர்களிடம் மீண்டும் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி கோரி மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ரகு கணேஷ் மனு செய்தார். அந்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். நீதிபதி ஜி.இளங்கோவன் விசாரித்தார்.சி.பி.ஐ.,தரப்பு: வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் இம்மனு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இரு சாட்சிகளும் 10 நாட்கள் மதுரை கீழமை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளனர். இவ்வாறு ஆட்சேபம் தெரிவித்தது.நீதிபதி: குற்றம்சாட்டப்பட்ட இதர போலீஸ்காரர்கள் தரப்பில் இரு சாட்சிகளிடமும் விரிவாக குறுக்கு விசாரணை செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் தரப்பில் தனியாக விசாரணை செய்யத் தேவையில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை