மேலும் செய்திகள்
பதில் மனு தாமதம்; உயர்நீதிமன்றம் அபராதம்
03-Oct-2025
மதுரை: மதுரை மோகன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை திருநகரிலுள்ள கட்டடம் தொடர்பாக மாநகராட்சி உதவி கமிஷனர் நோட்டீஸ் அனுப்பினார். அது சட்டவிரோதமானது. அதனடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும். நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு உத்தரவு: மனுதாரரின் சட்டவிரோத கட்டுமானத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி ஏற்கனவே வழக்கு தாக்கலானது. மாநகராட்சி தரப்பில், 'அங்கீகாரமின்றி கட்டுமானம் அமைக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கப்படும்,' என தெரிவிக்கப்பட்டது. உண்மைகளை மறைத்து தற்போது மனுதாரர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். மனுவை தள்ளுபடி செய்கிறோம். மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கிறோம். இதை உயர்நீதிமன்ற சட்டப் பணிகள் ஆணைக்குழுவிற்கு செலுத்த வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.
03-Oct-2025