உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / எலும்பு ஆலைக்கு எதிராக வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

எலும்பு ஆலைக்கு எதிராக வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரை: தென்காசி மாவட்டம் கீழ ஆம்பூரில் விலங்குகளின் காய்ந்த எலும்புகளை அரைக்கும் தொழிற்சாலைக்கு எதிராக நடவடிக்கை கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. மன்னார்கோவில் டெமுஜின் தாக்கல் செய்த பொதுநல மனு: கீழ ஆம்பூரில் விலங்குகளின் காய்ந்த எலும்புகளை அரைக்கும் ஒரு தொழிற்சாலை உள்ளது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. தொழிற்சாலையிலிருந்து துர்நாற்றம் வெளியேறுகிறது. மக்களுக்கு கண் எரிச்சல் மற்றும் பிற உடல்நல பாதிப்பு ஏற்படுகிறது. கழிவுநீர் விவசாய நிலத்தில் கலக்கிறது. விவசாயம், நிலத்தடி நீர் பாதித்துள்ளது. மக்கள் போராட்டம் நடத்தினர். அருகிலுள்ள கிராம மக்களின் நலன் கருதி விசாரணை நடத்த வேண்டும். ஆலையை மூட வேண்டும் அல்லது வேறு இடத்திற்கு மாற்ற வலியுறுத்தி கலெக்டருக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தாழைமுத்தரசு ஆஜரானார். நீதிபதிகள் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர், கலெக்டர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு நவ.,3 க்கு ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை