அழகர்கோவில் சொத்து பாதுகாக்க நடவடிக்கை உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: சென்னை ராதாகிருஷ்ணன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலுக்குச் சொந்தமாக பல்வேறு இடங்களில் சொத்துக்கள் உள்ளன. அவற்றை கண்டறிந்து பாதுகாக்க வேண்டும். கோயில் வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் அடிப்படை வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்க தமிழக அறநிலையத்துறை செயலர், கமிஷனர், கோயில் செயல் அலுவலருக்கு 2018ல் மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு பிறப்பித்த உத்தரவு: இவ்விவகாரத்தில் ஏற்கனவே சில நடவடிக்கைகளை அரசு தரப்பு எடுத்துள்ளது. கோயில் சொத்துக்களை பாதுகாக்க சட்டப்படி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.