மதுரையில் செயற்கை கருத்தரித்தல் மையம் உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: மதுரை வெரோனிகா மேரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:குழந்தை இல்லா தம்பதிகளின் நலன் கருதி ஆந்திரா, கேரளாவில் சில அரசு மருத்துவமனைகளில் செயற்கை முறையில் கருத்தரித்தல் சிகிச்சை மையங்கள் உள்ளன. அதுபோல் சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு தென்மாவட்டங்களை சேர்ந்த குழந்தையில்லா ஏழை தம்பதிகள் செல்ல வேண்டியுள்ளது. நேரம், பொருளாதாரம் விரையமாகிறது. மதுரை அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை மையம் ஏற்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு: ஏற்கனவே இது தொடர்பாக தமிழக அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. சட்டத்திற்குட்பட்டு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.