பா.ஜ.,வினர் 224 பேர் மீதான வழக்கு ரத்து உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: கோயில்களில் இருப்பில் உள்ள தங்கத்தை உருக்கி, கட்டிகளாக மாற்றி டெபாசிட் செய்ய அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிராக மதுரை எல்லீஸ்நகரிலுள்ள அறநிலையத்துறை அலுவலகம் முன் 2023 செப்.11ல் பா.ஜ.,வினர் முற்றுகையில் ஈடுபட முயற்சித்தனர். அனுமதியின்றி சட்டத்திற்கு புறம்பாக அலுவலகத்திற்குள் நுழைய முயற்சித்து, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக பா.ஜ., மாவட்டத் தலைவர் மகாசுசீந்திரன், மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு உள்ளிட்ட 224 பேர் மீது எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்கு பதிந்தனர். கார்த்திக் பிரபு,'அமைதியாக போராட்டம் நடத்தினோம். எவ்வித அசம்பாவிதமும் நடக்கவில்லை. யாரையும் தடுக்கவில்லை. வழக்கை ரத்து செய்ய வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தனர்.நீதிபதி எம்.நிர்மல்குமார்: வழக்கு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.