உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / த.வெ.க., பொதுச்செயலாளர் மீதான வழக்கில் தடை உயர்நீதிமன்றம் உத்தரவு

த.வெ.க., பொதுச்செயலாளர் மீதான வழக்கில் தடை உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: த.வெ.க., பொதுச்செயலாளர் ஆனந்த் மீது திருச்சி விமான நிலைய போலீசார் பதிந்த வழக்கிற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்தது. 2026 சட்டசபை தேர்தலையொட்டி த.வெ.க., தலைவர் விஜய் முதற்கட்ட அரசியல் சுற்றுப்பயண பிரசாரத்தை திருச்சியில் துவக்குகிறார். இதற்கு போலீசாரிடம் அனுமதி பெறுவதற்காக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் செப்.,6ல் விமானம் மூலம் திருச்சி வந்தார். அவரை வரவேற்க த.வெ.க.,தொண்டர்கள் விமான நிலையம் வந்தனர். ஆனந்த் அருகிலுள்ள விநாயகர் கோயிலில் வழிபாடு செய்தார். சட்டவிரோதமாகக் கூடி, போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தி, போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக ஆனந்த் உள்ளிட்ட சிலர் மீது திருச்சி விமான நிலைய போலீசார் வழக்கு பதிந்தனர். ஆனந்த்,'உள்நோக்குடன், தவறாக வழக்கு பதியப்பட்டுள்ளது. வழக்கின் மீதான மேல் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். வழக்கை ரத்து செய்ய வேண்டும்,' என உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தார். நீதிபதி சுந்தர்மோகன் விசாரித்தார். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அறிவழகன் ஆஜரானார். நீதிபதி வழக்கின் மீதான மேல்நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி