நெடுஞ்சாைல பராமரிப்பு ஊழியர்கள் தர்ணா
மதுரை; மதுரையில் தமிழ்நாடு நெடுஞ்சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தினர் கோட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் மாலை நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.மாநில துணைத் தலைவர் பரமேஸ்வரன் தலைமை வகித்தார். கோட்டத் தலைவர் மாரி முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் நுார்ஜஹான் சிறப்புரையாற்றினார். வணிகவரித்துறை ஊழியர்கள் சங்க இணை செயலாளர் கல்யாணசுந்தரம், நெடுஞ்சாலைக் கோட்ட தலைவர்கள் கண்ணன், மதுரை செயலாளர் பாண்டியன், சிவகங்கை பொருளாளர் முனுசாமி உட்பட பலர் பங்கேற்றனர். சாலைப் பணியாளர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உடனே அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தினர்.