உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை

ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை

மதுரை : மதுரை ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் மாநில துணைத் தலைவர் சுந்தரவடிவேல் கூறியதாவது: சித்திரைத்திருவிழாவில் அம்மனும், சொக்கநாதரும் மாசி வீதிகளில் தினமும் உலா வருவர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழியில் தரிசனம் செய்வர். மாசி வீதிகளில் ஆக்கிரமித்து நிறுத்தியுள்ள வாகனங்கள் இன்னும் அகற்றப்படவில்லை. ரோடுகள் சரிசெய்யவில்லை. வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால் நான்கு மாசி வீதிகளிலும் குடிநீர் வழங்க, நடமாடும் கழிப்பறை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இலவச ஹெல்ப் லைன் அறிமுகம் செய்து மக்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும்.அவசரமாக பணிகளை மேற்கொண்டால் முழுமை பெறாது. எனவே கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் துரிதமாக செயல்பட வேண்டும், என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ