எச்.எம்.எஸ்., சங்க கூட்டம்
மதுரை: மதுரையில் அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் எச்.எம்.எஸ்., சங்க மாவட்டக்கிளை கூட்டம் நடந்தது. தலைவர் ரவி தலைமை வகித்தார். ஆலோசகர் அங்குசாமி வரவேற்றார். அரசு ஊழியர்களுக்கு தீபாவளி கால முன்பணம் ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். இதற்கு ஊழியரின் ஊதியத்தில் இருந்து மாதம் ரூ.3 ஆயிரம் வீதம், 10 மாதங்கள் பிடித்த செய்யலாம். மத்திய அரசின் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். போக்குவரத்து துறையில் தனியார்மய கொள்கையை அரசு கொண்டுவரக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. நிர்வாகிகள் கண்ணன், ஒச்சாத்தேவன், ஷாஜகான், பாலகிருஷ்ணன், சேதுராமன், சவுந்திரராஜ், சுந்தரராஜன், வீரப்பெருமாள் பங்கேற்றனர்.