| ADDED : பிப் 13, 2024 04:58 AM
மதுரை : மதுரையில் ரோட்டில் மாடுகளை திரிய விடும் உரிமையாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கும் வகையில் மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.தற்போது மாடு, குதிரை, பன்றிக்கு ரூ.1500 அபராதம் உள்ள நிலையில் ரூ.2500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக ரோடுகளில் சுற்றித்திரிவது தெரிந்தால் ரூ.10 ஆயிரமாகவும், அதற்கு மேல் தவறு செய்யும் உரிமையாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் அல்லது அவற்றை உரிமை கோரமுடியாது எனவும் மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.உரிமம் பெறாமல் மாநகராட்சிக்குள் எவ்வித கால்நடைகளையும் வளர்க்கக் கூடாது. இதன்படி மாடுகளுக்கு ரூ.100, கன்றுக்கு ரூ.50, குதிரைக்கு ரூ. 150, நாய்களுக்கு ரூ.100, பன்றிக்கு ரூ.100, கழுதைக்கு ரூ.150 என ஆண்டுதோறும் உரிமைத் தொகை செலுத்தி உரிமம் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றை பராமரிப்பது குறித்தும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.